ஹவுரா - நியூ ஜல்பாய்குரி வரையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.
பல்வேறு திட்டங்களை அடிக்கல் நாட்ட நாளை மேற்கு வங்கம் செல்லும் பிரதமர் மோடி, ஹவுரா ரயில் நிலையத்தில், ஹவுரா- புதிய ஜல்பைகுரியை இணைக்கும், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
ரயில் எங்கெங்கே நிற்கும்:
பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய இந்த ரயில், மால்டா டவுன், பர்சோய், கிஷான்கஞ்ச் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். 6.5 கி.மீ. தூரப் பாதையில், தாக்கூர்புக்கூர், சாகர்பசார், பேஹாலா சௌராஷ்டிரா, பேஹாலாபசார், தரத்தாலா ஆகிய 6 ரயில் நிலையங்கள் இதில் இணையும். இந்தத் திட்டம் ரூ. 2,475 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. சர்சுனா, தாக்கர், முச்சிப்பாரா, தெற்கு 24 பர்கானா, ஆகிய கொல்கத்தா நகரத்தின் தென்பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் இத்திட்டத்தின் மூலம் பெரும் பயனடைவார்கள்.
பிரதமரின் பயணத்தின் போது,
ஆகிய நான்கு ரயில் திட்டங்களை நாட்டுக்கு பிரதமர் மோடி அர்பணிக்கிறார். மேலும், ரூ.335 கோடிக்கும் அதிகமான செலவில் சீரமைக்கப்படவுள்ள நியூ ஜல்பைகுரி ரயில் நிலையப்பணிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.