காசி விஷ்வநாதர் ஆலய பணியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரதமர் மோடி

காசி விஷ்வநாதர் ஆலய பணியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரதமர் மோடி
காசி விஷ்வநாதர் ஆலய பணியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரதமர் மோடி
Published on

வாரணாசியில் உள்ள காசி விஷ்வநாதர் ஆலயத்தை சேர்ந்த பணியாளர்களுக்கு ஜூட் வகை காலணிகளை பரிசாக கொடுத்துள்ளார் பிரதமர் மோடி.

சுமார் 100 ஜோடி காலணிகளை பிரதமர் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலில், “காசி விஷ்வநாதர் ஆலய பணியாளர்கள் அனைவரும் வெறும் காலில் பணிசெய்வதை சமீபத்தில் பிரதமர் மோடி கண்டுள்ளார். கோயில்களுக்குள் காலணி அணியக்கூடாது என்பதால், அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர். இவ்விஷயத்தில் அங்கு பூஜை செய்யும் பொதுமக்கள் தொடங்கி, பூஜிக்கும் நபர்கள், செக்யூரிட்டிகள், கோயிலை சுத்தப்படுத்தும் பணியிலுள்ளோர் என பலரும் செருப்பு அணியாமல்தான் உள்ளே இருக்கின்றனர்.

இவர்களை மதிக்கும் வகையிலும், இவர்கள் கடுங்குளிரில் வெறும் காலுடன் வேலைகள் செய்வது அவர்களது உடல்நலத்துக்கு நல்லதல்ல என்று கருதியும் பிரதமர் மோடி 100 ஜோடி ஜூட் வகை காலணிகளை வழங்கியுள்ளார்” எனக்கூறப்பட்டுள்ளது. முன்னதாக பிரதமரின் சொந்தத் தொகுதியில் அமைந்துள்ள காசி விசுவநாதர் ஆலயத்தின் வளாகம் 600 கோடி ரூபாய் செலவில் கடந்த மாதம் புதுப்பிக்கப்பட்டிருந்தது.

கங்கை நதிக்கரையில் இருந்து கோயிலை இணைக்கும் வகையில் லலிதா படித்துறையில் இருந்து விஸ்வநாதர் கோவில் வரை 320 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் கொண்ட நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய அருங்காட்சியகம், நூலகம், பக்தர்கள் தங்கும் மையம் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com