“இத்தாலி மாநாட்டில் பங்கேற்க அனுமதி மறுப்பு; மோடிக்கு பொறாமை" - மம்தா பானர்ஜி

“இத்தாலி மாநாட்டில் பங்கேற்க அனுமதி மறுப்பு; மோடிக்கு பொறாமை" - மம்தா பானர்ஜி
“இத்தாலி மாநாட்டில் பங்கேற்க அனுமதி மறுப்பு; மோடிக்கு பொறாமை" - மம்தா பானர்ஜி
Published on

அடுத்த மாதம் இத்தாலியில் நடக்கவுள்ள உலக அமைதி மாநாட்டில் பங்கேற்க தனக்கு மத்திய அரசு அனுமதி மறுத்ததாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருக்கிறார்.

ரோமில் நடக்கவுள்ள உலக அமைதி மாநாட்டில் போப் பிரான்சிஸ், எக்குமினிக்கல் பேட்ரியார்ச் பர்தலோமிவ் மற்றும் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் ஆகியோருடன் பங்கேற்க மம்தா பானர்ஜி  அழைக்கப்பட்டார். இது தொடர்பாக பேசிய மம்தா பானர்ஜி, "ரோமில் உலக அமைதி பற்றிய மாநாட்டில் பங்கேற்க நான் அழைக்கப்பட்டேன். இம்மாநாட்டில் கலந்துகொள்ள எனக்கு இத்தாலி சிறப்பு அனுமதி அளித்தது. ஆனால் மத்திய அரசு இதற்கு அனுமதி மறுத்தது. முதலமைச்சருக்கு இது சரியல்ல என்று மத்திய அரசு கூறியது எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “உங்களால் என்னைத் தடுக்க முடியாது. நான் வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்பவில்லை. ஆனால் இது தேசத்தின் மரியாதையைப் பற்றியது. பிரதமர் மோடி இந்துக்களைப் பற்றி பேசிக்கொண்டே இருக்கிறார். நானும் ஒரு இந்து பெண், ஏன் என்னை இந்த கூட்டத்துக்கு அனுமதிக்கவில்லை? நீங்கள் முற்றிலும் பொறாமைப்படுகிறீர்கள் பிரதமர் மோடிஎன்று கூறினார்.

திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் தேபாங்சு பட்டாச்சார்யா தேவ் வெளியிட்ட இது குறித்த ட்வீட்டில்,முன்னதாக மத்திய அரசு மம்தா பானர்ஜியின் சீனா பயணத்தின் அனுமதியையும் ரத்து செய்தனர். சர்வதேச உறவுகள் மற்றும் இந்தியாவின் நலன்களை மனதில் கொண்டு அந்த முடிவை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். இப்போது ஏன் இத்தாலிக்கும் அனுமதி மறுக்கிறீர்கள் மோடி ஜி?” என கேள்வி எழுப்பினார். இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com