கொரோனா பரவல்... ஓராண்டுக்குப் பின் வெளிநாடு பயணம் செல்லும் பிரதமர் மோடி!

கொரோனா பரவல்... ஓராண்டுக்குப் பின் வெளிநாடு பயணம் செல்லும் பிரதமர் மோடி!
கொரோனா பரவல்... ஓராண்டுக்குப் பின் வெளிநாடு பயணம் செல்லும் பிரதமர் மோடி!
Published on

கொரோனா பரவலால் வெளிநாடு சுற்றுப் பயணம் செய்யாமல் இருந்த பிரதமர் ஓராண்டுக்குப் பின் வங்கதேசம் செல்லவிருக்கிறார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் பரவிய கொரோனா தொற்று உலகம் முழுக்க பரவியது. இந்தியாவிலும் பரவத்தொடங்கி கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு தற்போது தளத்தப்பட்டாலும் கொரோனா பரவலால் பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப் பயணங்களைத் தவிர்த்து வந்தார்.

தற்போது, ஓராண்டுக்குப் பின் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பை ஏற்று வரும் மார்ச் 26, 27 ஆகிய தேதிகளில் கலந்துகொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தில் வங்கதேசத்துடன் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன. அதோடு, வங்கதேசத்தை நிறுவிய ஷேக் முஜிப்பூர் ரகுமான் நூற்றாண்டு விழாவிலும் கலந்துகொள்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com