மோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்  

மோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்  
மோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்  
Published on

தமிழ் மொழியை பயன்படுத்தியதற்காக பாராட்டிய நடிகர் விவேக் மற்றும் தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆகிய இருவருக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி- சீன அதிபர் இருவரும் கடந்த 11 மற்றும் 12ஆம் தேதிகளில் மாமல்லபுரத்தில் சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி தமிழ் கலாச்சார உடையான வேட்டி சட்டையை அணிந்து இருந்தார். அப்போது  மாமல்லபுரம் தொடர்பான கவிதை ஒன்றை பிரதமர் எழுதியுள்ளார். அதற்கான தமிழ் மொழி பெயர்ப்பை பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

இதற்கு நடிகர் விவேக் பிரதமரை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “இயற்கையை மதிப்பது கடவுளை மதிப்பதற்கு சமமானது. நீங்கள் மாமல்லபுரம் தொடர்பாக எழுதிய கவிதைக்கு நன்றி” எனப் பதிவிட்டிருந்தார். இதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இயற்கையை மதிப்பது நமது கலாச்சாரத்தில் ஒன்று. மாமல்லபுரத்தின் அழகிய கடல் மற்றும் அங்கு நிலவிய அமைதியான சூழல் எனது எண்ணங்களை பிரதிபலிக்க மிகவும் உதவியாக இருந்தது. நன்றி விவேக்” எனப் பதிவிட்டுள்ளார். 

அதேபோல பிரதமர் மோடி தமிழ் மொழி மீது கொண்டுள்ள பற்று குறித்து தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டிருந்தார். இதற்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார். இதற்கான பதிவில், “உலகின் பழமையான மொழியின் கலாசாரத்தில் என்னை வெளிப்படுத்தி கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது. தமிழ் மொழி மிகவும் அழகானது. தமிழ் மக்கள் மிகவும் தனித்துவமானவர்கள்” எனத் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com