2 மணி நேரத்திற்கு மேல் பிரதமர் மோடி உரை.. முழக்கம் எழுப்பிய எதிர்க்கட்சிகள்! கண்டித்த சபாநாயகர்!

பிரதமர் மோடி தனது உரையை தொடங்கியவுடன், மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கம் எழுப்பினர். மோடியின் பேச்சை கேட்க முடியாத அளவுக்கு எதிர்க்கட்சியினர் முழக்கம் எழுப்பியதால் சிறிதுநேரம் பேச்சி நிறுத்தினார்.
மோடி
மோடிஎக்ஸ் தளம்
Published on

18வது மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்றம் கடந்த வாரம் முதல்முறையாகக் கூடியது. இந்தத் தேர்தலில் வென்ற எம்.பிக்கள் பதவியேற்றுக் கொண்ட நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இவ்விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, திமுக எம்பி ஆ.ராசா ஆகியோர் மத்திய அரசைக் கடுமையாகச் சாடினர்.

இந்த நிலையில், இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசினார். அவர், “தங்களுக்குக் கிடைத்த தோல்வியை காங்கிரஸ் கட்சியால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. 1984க்குப் பிறகு அக்கட்சி ஒருமுறைகூட 250 இடங்களுக்கு மேல் வெற்றி பெறவில்லை. காங்கிரஸ் கட்சி 250 தொகுதிகளை வெல்ல முடியவிலை. காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்று விட்டு 100-க்கு 99 என்பது போல பேசுகிறது. 543 தொகுதிகளில்தான் காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வென்றது. தேர்தல்களில் தோல்வி அடைவதில் அக்கட்சி உலக சாதனை படைத்திருக்கிறது.

இதையும் படிக்க: ராகுல் டிராவிட்டிற்கு மீண்டும் பதவி வழங்கப்படாதது ஏன்?.. பின்னணியில் இருக்கும் அரசியல் என்ன?

மோடி
”8 முறை தமிழகத்திற்கு மோடி வந்தபோதும் பாடம் புகட்டியது திராவிட மண்” - மக்களவையை அலறவிட்ட ஆ.ராசா!

எதிர்க்கட்சி வரிசையில் அமருமாறுதான் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் தீர்ப்பளித்தனர். அங்கேயே காங்கிரஸ் தொடர்ந்து அமர்ந்துகொண்டிருக்கும். 2029ல் தேர்தலிலும் காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையிலேயே அமரும். 3 தேர்தல்கள் நடந்தும் காங்கிரஸால் ஆட்சியமைக்க முடியாமல் தோற்றுப் போயுள்ளது. எங்களை தோற்கடித்துவிட்டது போன்ற மாயையை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது. தோல்விக்குப் பின் அக்கட்சி சுயபரிசோதனை செய்து ஆராய வேண்டும்.

இந்தியாவை, 2047ஆம் ஆண்டுக்குள் வல்லரசாக்க 24x7 உழைக்கிறோம். 2014ஆம் ஆண்டுக்கு முன்பு, இந்த நாடு முன்னேறாது என்றுதான் நாட்டு மக்கள் நினைத்திருந்தார்கள். ஊழலுக்கு எதிரான சகிப்பின்மை கொள்கையால்தான் நாட்டு மக்கள் எங்களை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடிப் பேரை வறுமையிலிருந்து மீட்டுள்ளோம். மேலும் செயல்படுத்த முடியாத அனைத்தையும் நாங்கள் செயல்படுத்திக் காட்டியிருக்கிறோம்.

இதையும் படிக்க: ”என் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்” - சபாநாயகரிடம் வேண்டுகோள் வைத்த பாகிஸ்தான் பெண் எம்.பி! #Video

மோடி
”பாஜகவால் ஒன்றும் செய்ய முடியாது” - மத்திய அரசைக் கடுமையாகச் சாடிய மஹுவா மொய்த்ரா!

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒரு ஊழலை மறைக்க மற்றொரு ஊழல் நடந்துள்ளது. 2014ஆம் ஆண்டிற்கு முன்பு இந்தியர்கள் தன்னம்பிக்கையை இழந்துவிட்டிருந்தனர்.கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு வரலாற்றுச் சாதனைகளை செய்துள்ளது பாஜக. 2014ஆம் ஆண்டுக்கு முன்பு தீவிரவாத தாக்குதல்கள் அதிகம் நடந்தது, 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு தீவிரவாதிகளை, அவர்களது நாட்டுக்கேச் சென்று தாக்கியுள்ளோம். தற்போது தீவிரவாதிகளை சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தி அழித்து வருகிறம். கடந்த 10 ஆண்டுகளில் மக்களின் மனதில் நம்பிக்கை பிறந்ததுள்ளது. மூன்றாவது முறை ஆட்சியில் அமர்ந்துள்ளோம். மும்மடங்கு வேகத்துடன் செயல்படுவோம்” எனப் பேசினார்.

பிரதமர் மோடி உரையாற்றியபோது 'மணிப்பூர், நீட் விவகாரத்தில் நீதி வேண்டும்' என்றும், 'நீட் வேண்டாம்' என்றும், 'கொல்லாதே கொல்லாதே மாணவர்களை கொல்லாதே, மாணவர்களை காப்பாற்று' எனவும் தமிழக எம்.பிக்கள் தமிழில் முழக்கமிட்டனர். மற்ற எதிர்க்கட்சியினரும் பிரதமரின் பேச்சுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் முழக்கமிட்டனர்.

இதையும் படிக்க: ’இன்னும் ஒரு வேலை இருக்கிறது..’ ஓய்வுபெற்ற விராட் கோலியிடம் இறுதியாக அறிவுரை கூறிய ராகுல் டிராவிட்!

மோடி
பிரதமர் மோடி vs ராகுல்காந்தி என மாறிய விவாதம்... அனல் பறந்த மக்களவை

மேலும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர், அவைத் தலைவர் இருக்கைக்கு அருகே சென்று கோஷமெழுப்பினர். சிலர், பிரதமர் மோடியின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து கைதட்டி கோஷமெழுப்பினர். இதற்கு அவைத் தலைவர் ஓம் பிர்லா கடும் கண்டனத்தைத் தெரிவித்தார். “எதிர்க்கட்சியினர் மாண்புடன் நடந்துகொள்ள வேண்டும்” என சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரித்தார்.

முன்னதாக பிரதமர் மோடி பேசத் தொடங்கியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடத் தொடங்கினர். மணிப்பூர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசுமாறு எதிர்க்கட்சி எம்.பிக்கள் முழக்கமிட்டனர். இதனால் பிரதமர் மோடி சில நிமிடங்கள் தனது பேச்சை நிறுத்திய நிலையில், பின்னர் எதிர்க்கட்சிகளின் முழக்கத்துக்கு இடையே தொடர்ந்து மோடி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இன்னும் மக்களிடம் புழங்கும் ரூ.7,581 கோடி 2000 ரூபாய் நோட்டுகள்.. ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவல்!

மோடி
இந்து மக்களின் உணர்வை புண்படுத்தினாரா ராகுல்? அனல் பறந்த விவாதம்... நாடாளுமன்றத்தை அதிரவைத்த ராகுல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com