நாடு முழுவதும் 77-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு 10-வது முறையாக தேசியக் கொடி ஏற்றினார். தேசியக் கொடி ஏற்றி வைத்து விட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர்,
''வெளிநாட்டினர் இந்தியாவிற்குள் புகுந்ததுடன் இல்லாமல் நமது வளங்களையும் கொள்ளையடித்தனர். இந்தியா தான் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. மணிப்பூரில் அமைதியை கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. மணிப்பூர் மாநிலத்தில் விரைவில் அமைதி திரும்பும். அம்மக்களுக்காக ஒட்டுமொத்த தேசமே துணைநிற்கும்
தற்போது எடுத்துவரும் நடவடிக்கைகளின் தாக்கம் அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு இருக்கும். இந்தியா தனது எதிர்காலத்தை தானே வடிவமைத்துக்கொள்ளும் திறனை பெற்றுள்ளது. உலகத்திற்கே இந்தியா மிகப்பெரிய நம்பிக்கையை விதைத்துள்ளது'' என்றார்.