அயோத்தி ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை விழா கோலாகலமாகத் நடைபெற்றது. பிராண பிரதிஷ்டைக்காக, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தட்டில் பட்டு வஸ்திரங்கள் மற்றும் பூஜை பொருள்களுடன் பிரதமர் மோடி வந்தார். இதையடுத்து பிரதமர் மோடிக்கு, சாஸ்திரிகள் சங்கல்பம் செய்து வைத்தனர்.
இதைத் தொடர்ந்து ராமேஸ்வரத்தில் இருந்து பிரதமர் மோடி கொண்டு சென்ற புனித நீரைக்கொண்டு விக்ரஹத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து வேத மந்திரங்கள் ஓத ராமர் சிலையில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தாமரை மலரைக் கொண்டு பிரதமர் பிராண பிரதிஷ்டை செய்தார்.
இதையடுத்து அங்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர்... “ராமேஸ்வரம் அரிசல்முனையில் காலச்சக்கரம் மாறுவதை உணர்ந்தேன். ஒட்டுமொத்த தேசமே ராமர் கோவில் திறப்பை தீபாவளி போல் இன்று கொண்டாடுகிறது. ராமேஸ்வரம் முதல் சரயு நதிக்கரை வரை ராம நாமமே ஒலிக்கிறது.
ராமர் கோவில், யாரையும் வீழ்த்தியதால் கிடைத்த வெற்றியல்ல. கண்ணிமாக கிடைத்த வெற்றி. ராம் என்பது யாரையும் எரிக்கும் நெருப்பல்ல, சக்தியை கொடுக்கும் ஆற்றல். ராமர் புகழ் ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கும்” என்று பேசினார். மேலும் அவர் பேசியதை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்.