உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் பிரதமர் மோடி, அங்கு தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.
இதனிடையே, தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், “நான் ஒருபோதும், இந்து முஸ்லிம் பிரிவினையை ஏற்படுத்தமாட்டேன். மோடி மாடலில் ஒரு போதும் இந்து - முஸ்லிம் பிரிவினைக்கு இடமில்லை. எனது பால்ய வயதில் இருந்து, எனது வீடருகே இருந்த இஸ்லாமிய நண்பர்களுடன் ஈத் விழா கொண்டாடி இருக்கிறேன்.
சிறுபிள்ளை காலத்தில் இருந்து முஸ்லிம் குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறேன். 2002 ஆம் ஆண்டு முதல் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டார்கள்.
அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்பவர்களாக இந்துக்களும் உள்ளார்கள். இஸ்லாமியர் எனக்கு வாக்களிப்பார்கள். இந்து முஸ்லிம் பிரிவினையை ஏற்படுத்தினால் நான் பொதுவாழ்வுக்கு தகுதியற்றவன்” என்று தெரிவித்துள்ளார்.