ஜார்க்கண்ட்: பிரதமர் மோடி பயணம் செய்யவிருந்த விமானத்தில் திடீர் கோளாறு.. டெல்லி செல்வதில் தாமதம்!

பிரதமர் மோடி டெல்லி செல்லவிருந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் அவர் டெல்லி திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மோடி
மோடிஎக்ஸ் தளம்
Published on

ஜார்க்கண்ட்டில் முக்தி மோர்ச்சா தலைமையிலான ஹேமந்த் சோரன் கட்சி ஆட்சியில் உள்ளது. இம்மாநிலத்தின் 81 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட 5 ஆண்டு பதவிக்காலம் 2025 ஜனவரி 5-ல் முடிவடைகிறது.

இதையடுத்து, இம்மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த முடிவுசெய்த தேர்தல் ஆணையம், அதற்கான தேதியை அறிவித்தது. அதன்படி, ஜார்கண்ட் மாநிலத்திற்கு நவம்பர் 13 மற்றும் 20 என இருகட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல்
ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல்

அந்த வகையில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இரண்டாவது கட்ட வாக்குப்பதிவுக்கான பரப்புரை சூடுபிடித்துள்ளது. இதற்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சித் தலைவர்கள் போட்டிப்போட்டு பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மோடி
சென்னை: பரபரப்பாக நடக்கும் சிவகார்த்திகேயனின் அடுத்த பட ஷூட்டிங்... சூழ்ந்த பொதுமக்கள்! #Video

இந்த நிலையில்தான், பிரதமர் மோடி இன்று அங்கு பரப்புரை செய்தார். பரப்புரையை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி டெல்லி திரும்ப இருந்தார். இருப்பினும், அவர் செல்லவிருந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

இதனால் பிரதமர் மோடி டெல்லி திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமானம் இப்போது தரையிறக்கப்பட்டுள்ள நிலையில், என்ன சிக்கல் என்பதைக் கண்டறியும் பணிகளில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மோடி
தேர்தல் நாளில் பாஜக மீது ஜார்க்கண்ட் முதல்வர் முன்வைத்த பரபரப்பு குற்றச்சாட்டு... முழு விவரம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com