“எதிர்ப்பு அரசியலிருந்து எதிர்க்கட்சிகள் வெளியே வர வேண்டும்” - பிரதமர் பேச்சு!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து பிரதமர் நரேந்திரமோடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
பிரதமர் நரேந்திரமோடி
பிரதமர் நரேந்திரமோடி புதிய தலைமுறை
Published on

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று (ஜூலை 22) முதல் ஆகஸ்ட் 12 தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், இன்று மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

மூன்றாம் முறையாக பதவியேற்ற நரேந்திர மோடி அரசின் முதல் மத்திய பட்ஜெட் நாளை தொடங்க உள்ளது. இதில், நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக 7 ஆவது முறையாக நாளை பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார்.

பிரதமர் நரேந்திரமோடி
இதற்கு முன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த தமிழர்கள் யார் யார்?

அதில், “ஆக்கப்பூர்வமான கூட்டத் தொடர் நடைபெற வேண்டும் என மக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். கடந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இன்று மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது.

என்டிஏ கூட்டணி ஆட்சியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தருணம் இது. நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். வளர்ச்சிக்கான பாதையில் மத்திய அரசு தொடர்ந்து நடைபோடும். அமுத காலத்தை உருவாக்குவதற்கான பட்ஜெட் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

பிரதமர் நரேந்திரமோடி
வரவு எட்டணா செலவு பத்தனா சூழலில் நிதியமைச்சர்.. பட்ஜெட் மேல் இருக்கும் மில்லியன் டாலர் கேள்வி

கட்சி வித்தியாசங்களை கடந்து அனைவரும் நாட்டுக்காக உழைக்க வேண்டும். அடுத்த 5 ஆண்டுகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். 2029-ல் தேர்தல் குறித்து பேசலாம். இப்போது மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். எதிர்ப்பு அரசியலிருந்து எதிர்க்கட்சிகள் வெளியே வர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com