“ஒரே நாடு ஒரே தேர்தல் & பொது சிவில் சட்டத்தை விரைந்து கொண்டு வரும் பணிகள் தீவிரம்” - பிரதமர் மோடி

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி, குஜராத்தில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
pm modi
pm modipt web
Published on

படேல் சிலைக்கு பிரதமர் மரியாதை

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி, குஜராத்தில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் பொது சிவில் சட்டத்தை விரைந்து கொண்டுவரும் பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டுவதாக தெரிவித்தார்.

இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. அவரது 150ஆவது பிறந்தநாளை ஒட்டி, டெல்லியிலுள்ள அவரது சிலைக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் சக்சேனா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நித்யானந்த் ராய் உள்ளிட்டோர் சர்தார் வல்லபாய் படேலின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

pm modi
நவ. முதல் வார இறுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்திற்கு மிக கனமழை இருக்குமா?

நாட்டை பலவீனப்படுத்த சில சக்திகள் முயற்சி

குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து நடைபெற்ற பாதுகாப்புப் படையினரின் சாகச நிகழ்ச்சி, அங்கிருந்தவர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இருசக்கர வாகனங்களில் நடத்திய சாகசம் முதல் வானில் போர் விமானங்களில் நடத்திய சாகசகம் வரை, பல்வேறு விதமாக வீரர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்தியது, காண்போரை பிரமிக்கவைக்கும் வகையில் அமைந்தது.

தொடர்ந்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவிற்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள சில சக்திகள், நாட்டை பலவீனப்படுத்தவும், சர்வதேச அரங்கில் இந்தியா மீது எதிர்மறையான எண்ணங்களை உருவாக்கவும் முயற்சித்து வருவதாக குற்றஞ்சாட்டினார். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முடக்கும் நோக்கத்தில், அந்நிய முதலீட்டாளர்கள் மனதில் இந்தியா குறித்து தவறான பிம்பத்தை ஏற்படுத்த முயற்சிகள் அரங்கேறுவதாக குற்றஞ்சாட்டிய அவர், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு குறித்து பேசிவரும் சிலர், சாதியை வைத்து நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாக மறைமுகமாக சாடினார்.

pm modi
சிஎஸ்கே படையில் மீண்டும் தோனி.. தக்கவைக்கப்பட்ட மற்ற வீரர்கள் யார்? எவ்வளவு தொகை?

ஒரே நாடு ஒரே தேர்தல்: தீவிரம் காட்டும் மத்திய அரசு

தொடர்ந்து பேசிய அவர், வளர்ச்சியடைந்த நாடாக இந்தியாவை மாற்றவேண்டும் என்பதே தனது எண்ணம் என்றும், அதற்காக ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் பொது சிவில் சட்டத்தை விரைந்து கொண்டுவரும் பணிகளில் மத்திய ஈடுபட்டுவருவதாகவும் தெரிவித்தார்.

rahul gandhi
rahul gandhipt web

இதற்கிடையே, சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு மரியாதை செலுத்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, படேலின் ஆளுமை மற்றும் எண்ணங்கள் தேசத்திற்கு சேவை செய்யவரும் அடுத்த தலைமுறையினரை ஊக்குவிக்கும் என குறிப்பிட்டுள்ளார். இதேபோல், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், இந்தியாவை ஒருங்கிணைத்து நாட்டில் அன்பையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டிய அவரது காலடி தடங்கள், எப்போதும் தங்களை வழிநடத்தும் என பதிவிட்டுள்ளார்.

pm modi
”இன்னிங்ஸ் + 273 ரன்கள்” - டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த தென்னாப்ரிக்கா!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com