“மீனவர்களின் நல்வாழ்வு பற்றி விவாதித்தோம்” - பிரதமர் மோடி ட்வீட்

“மீனவர்களின் நல்வாழ்வு பற்றி விவாதித்தோம்” - பிரதமர் மோடி ட்வீட்
“மீனவர்களின் நல்வாழ்வு பற்றி விவாதித்தோம்” - பிரதமர் மோடி ட்வீட்
Published on

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச சந்திப்பு குறித்து பிரதமர் மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஐந்து நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து உரையாற்றினார். இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டாகச் சேர்ந்து அறிக்கையை வெளியிட்டனர். இந்தக் கூட்டறிக்கையில் பிரதமர் மோடி, பயங்கரவாதம் ஒரு பெரிய அச்சுறுத்தல் என்றும், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளும் இந்தப் பிரச்னையை உறுதியாக எதிர்த்துப் போராடியுள்ளன என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் இச்சந்திப்பு குறித்து சில கருத்துகளைப் பதிவிட்டுள்ளார். அதில்,“இன்றைய பேச்சுவார்த்தைகளின் போது, ராஜபக்சவும் நானும் இருதரப்பு மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்த கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள முடிந்தது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பான விஷயங்கள் எங்களது விவாதங்களில் முக்கியமாக இடம்பெற்றன. இலங்கை கூட்டுப் பொருளாதார திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் விவாதித்தோம்.

இரு நாட்டு மக்களுக்கு இடையேயான உறவை இன்னும் பலப்படுத்த முடியும் என்று நாங்கள் இருவரும் ஒப்புக்கொண்டோம். மேலும் இந்தப் பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கு இடையேயான இணைப்பை அதிகரிப்பது குறித்தும் உரையாடினோம். இரு நாட்டு மக்களைப் பாதிக்கிறது என்பதால் மீனவர்களின் நல்வாழ்வு பற்றிய விவாதங்களும் நடந்தன” எனக் குறிப்பிட்டுள்ளார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com