பிரதமர் மோடியின் தாயார் உடல் தகனம் : அவரவர் பணியை செய்ய குடும்பத்தினர் வேண்டுகோள்

பிரதமர் மோடியின் தாயார் உடல் தகனம் : அவரவர் பணியை செய்ய குடும்பத்தினர் வேண்டுகோள்
பிரதமர் மோடியின் தாயார் உடல் தகனம் : அவரவர் பணியை செய்ய குடும்பத்தினர் வேண்டுகோள்
Published on

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் (100) இன்று காலை உடல்நலக்குறைவால் காலமான நிலையில், அவர் உடல் தகணம் செய்யப்பட்டுள்ளது.

உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென்  மோடி நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, பிரதமர் மோடி மருத்துவமனைக்குச் சென்று தாயாரின் உடல்நிலை குறித்து நேரில் விசாரித்தார். அப்போது ஹீராபென்னின் உடல்நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் பிரதமரிடம் விளக்கிக் கூறினர். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைவில் அவர் டிஸ்சார்ஜ் ஆவார் என்று சொல்லப்பட்டது. இருப்பினும் உடல்நலம் மோசமானதால் இன்று காலை அவர் மறைந்தார் என்ற செய்திகள் வெளிவந்தன. தாயாரின் மறைவை பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். தாயின் மறைவு குறித்து டிவிட்டரில் பதிவிட்டிருந்த பிரதமர், நூற்றாண்டு அற்புத வாழ்க்கை இறைவனின் பாதங்களை அடைந்ததாக உருக்கமாக குறிப்பிட்டிருந்தார்.  

இதையடுத்து தாயின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க பிரதமர் அகமதாபாத் விரைந்தார். அங்கு தனது தாயின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பிரதமர், அவரது உடலை தனது தோள்களில் சுமந்து சென்றார். இதற்கிடையே பிரதமரின் தாய் மறைவுக்கு குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சர்கள், மாநில ஆளுநர்கள் இரங்கல் தெரிவித்தனர். தமிழக ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில் அவரது உடல் தற்போது தகனம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கு தொடங்கி தகனம் வரையில் அனைத்து சடங்களிலும் பங்குகொண்டார் பிரதமர் மோடி.

மேற்கொண்டு பிரதமர் தனது அடுத்தடுத்த பணிகளை இன்று செய்ய உள்ளார். காணொளி வாயிலாக பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கி வைக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. மோடியை போலவே அனைவரும், அவரவர் திட்டமிட்டவற்றை செய்யுமாறு மோடியின் குடும்பத்தினர் அறிவுறுத்தியுள்ளனர். `கடினமான காலங்களில் அனைவரும் செலுத்திய பிராத்தனைகளுக்கும் இரங்கலுக்கு நன்றி; மறைந்த ஆன்மைவை மனதில் நிறுத்தி, அவரவர் பணியை தொடர்வதே அவருக்கு செய்யும் மரியாதை’ என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com