சீனாவுடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாகப் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது.
லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் பலியாகினர். இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா-சீனா இடையே பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் சீன விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப் பிரதமர் மோடி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, தற்போது பிரதமர் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கியுள்ளது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.