பரம் ருத்ரா கம்ப்யூட்டர்களை பிரதமர் மோடி டெல்லியில் இருந்தவாறு காணொளி முறையில் அறிமுகப்படுத்தினார். அப்போது பேசிய அவர், “தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் கணினிகளின் கணக்கீட்டு வேகம் ஒரு நாட்டின் திறனை மதிப்பிடும் ஒரு அளவு கோலாக உள்ளது.
130 கோடி ரூபாய் செலவில் உருவான சூப்பர் கம்ப்யூட்டர்கள் டெல்லி, கொல்கத்தா, புனே ஆகிய இடங்களில் உள்ள ஆராய்ச்சி மையங்களில் நிறுவப்பட்டுள்ளன.
பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்கள் தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் மிஷன் திட்டத்தில் கீழ் உருவாக்கப்பட்டவை. இவற்றில் உள்ள பெரும்பாலான பாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டவை. அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.