பிரதமர் மோடி 'விவசாயிகளின் கடவுள்'. வேளாண் மசோதாக்களை எதிர்க்கும் கட்சிகள் விவசாயிகளுக்கு எதிரானவர்கள் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கூறியுள்ளார்.
கடும் விமர்சனங்களை சந்தித்துவரும் வேளாண் மசோதாக்கள் தொடர்பாக பேசிய மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் “ சமீபத்தில் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சீர்திருத்த மசோதாக்கள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும். இந்த மசோதாக்களை எதிர்ப்பவர்கள், விவசாயிகளுக்கு எதிரானவர்கள். இடைத்தரகர்களின் நலனைப் பாதுகாப்பதற்காகவே எதிர்க்கட்சிகள் இம்மசோதாக்களை எதிர்க்கிறார்கள்” என்று கூறினார்
மேலும்"விவசாயிகளுக்கு நலன்பயக்கும் தொலைநோக்கான முடிவுகளை எடுக்கும் பிரதமர் விவசாயிகளின் கடவுள். விவசாய சீர்திருத்தங்கள் தொடர்பான மூன்று மசோதாக்களும் விவசாயிகளுக்கு அவர் வழங்கிய ஆசீர்வாதம். இந்த மசோதாக்களை எதிர்ப்பவர்கள் விவசாயிகளின் நலம் விரும்பிகள் அல்ல, அவர்கள் விவசாயிகளை தவறாக வழிநடத்துகிறார்கள்
எந்தவொரு ஏற்றுமதியாளரும், ஒரு நல்ல விலையை செலுத்துவதன் மூலம், விவசாயிகளிடமிருந்து நேரடியாக கோதுமை மற்றும் அரிசியை கொள்முதல் செய்தால் இடைத்தரகர்கள் தேவையில்லை. அப்படியானால் எதிர்க்கட்சிகள் ஏன் இந்த இடைத்தரகர்களை ஆதரிக்கின்றன? எதிர்க்கட்சிகள் பிரதமரை எதிர்க்கவில்லை, மாறாக விவசாயிகளின் நலன்களை கண்மூடித்தனமாக எதிர்க்கின்றன" என்று அவர் கூறினார்.