பிரதமர் நரேந்திர மோடி, தான் சிறுவயதில் தேநீர் விற்ற வாட்நகர் ரயில் நிலையத்தை புதுப்பித்து திறந்து வைத்தார்.
குஜராத்தில் உள்ள வாட் நகர் ரயில் நிலையத்தில் மோடியின் தந்தை தாமோதர்தாஸ் மோடி தேநீர் கடை நடத்தி வந்தார். அப்போது இளம் வயதில் மோடி, தன் தந்தைக்கு உதவியாக இருந்துள்ளார். தற்போது அந்த ரயில் நிலையம் எட்டரைக் கோடி ரூபாய் செலவில், பாரம்பரிய தோற்றத்துடன் புதுப்பிக்கப்பட்டது. அதை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
குஜராத் மாநிலம் மெஹ்சனா மாவட்டத்தில் அமைந்துள்ள புதுப்பிக்கப்பட்ட வாட்நகர் ரயில் நிலையத்தை திறந்துவைத்த மோடி, தான் சிறுவயதில் தேநீர் விற்றது முதல் தற்போது அரசின் தலைமைப்பதவியான பிரதமர் பதவியை வகிப்பது வரையிலான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். 21 ஆம் நூற்றாண்டின் தேச வளர்ச்சியில் ரயில்வேயின் பங்கு மற்றும் ரயில்வே மேம்பாட்டு திட்டங்கள் குறித்தும் மோடி பேசினார்.