75வது சுதந்திர தினக் கொண்டாட்டம் - டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் பிரதமர் மோடி

75வது சுதந்திர தினக் கொண்டாட்டம் - டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் பிரதமர் மோடி
75வது சுதந்திர தினக் கொண்டாட்டம் - டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் பிரதமர் மோடி
Published on

நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் நாளை நாடெங்கும் கொண்டாடப்படும் நிலையில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கு தலைநகர் டெல்லியில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பும் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரம் காவல்துறையினர், ராணுவத்தினர் தவிர தேசியப் பாதுகாப்பு படையின் ஸ்னைப்பர் பிரிவினர், ஸ்வாட் கமாண்டோக்கள் உள்ளிட்ட சிறப்பு பாதுகாவல் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். செங்கோட்டையை சுற்றியுள்ள உயரமான கட்டடங்களில் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். செங்கோட்டையில் பிரதமர் உரையாற்றும் இடத்திற்கும் பார்வையாளர்கள் அமர்ந்துள்ள இடத்திற்கும் இடையே பிரமாண்டமான கன்டெய்னர்கள் தடுப்பு அரணாக முதன்முறையாக வைக்கப்பட்டுள்ளன. ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடந்தால் அதை முறியடிக்க செங்கோட்டையில் ட்ரோனை வீழ்த்தும் சிறப்பு ஏற்பாடுகளும் நிறுவப்பட்டுள்ளன. சுமார் 350 கேமராக்களை கொண்டு செங்கோட்டைப்பகுதியில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியும் நடந்து வருகிறது.

செங்கோட்டை பகுதியை தவிர டெல்லியின் பிற பகுதிகளும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகள் சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். இது தவிர அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், அதிகாரிகள், வெளிநாட்டுத் தூதர்கள் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் பங்கேற்க உள்ளனர். கொரோனா காலம் என்பதால் சுதந்திர தின விழாவின்போது தனி மனித இடைவெளி, முகக் கவசம் உள்ளிட்ட தற்காப்பு விதிகளும் தீவிரமாக கடைபிடிக்கப்பட உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com