சுற்றுச்சூழலை மேம்படுத்தும் பணியில் சிறப்பாக செயல்பட்டமைக்காக பிரதமர் மோடிக்கு ‘சாம்பியன்ஸ் ஆப் த எர்த்’ விருது வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் ஐநா பொதுசெயலாளர் அந்தோணியோ குத்தேரஸ், மோடிக்கு விருதினை வழங்கினார். 2022ஆம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க நடவடிக்கை எடுத்தது உள்ளிட்ட சுற்றுசூழல் தொடர்பான நடவடிக்கைகளுக்காக பிரதமர் மோடிக்கு ஐநா சுற்றுச்சூழல் திட்டத்தின் ‘சாம்பியன்ஸ் ஆப் த எர்த்’ (Champions of the Earth) விருது அறிவிக்கப்பட்டது.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் ஐநா பொதுசெயலாளர் அந்தோணியோ குத்தேரஸ் மோடிக்கு விருதினை வழங்கினார். விருதினை ஏற்றுக் கொண்ட பிறகு பேசிய மோடி, இந்தியர் அனைவரும் சுற்றுசூழலை காக்க கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பருவநிலையை பண்பாட்டுடன் சேர்ந்ததாக கருத்தில் கொண்டு முக்கியத்துவம் அளிக்காவிட்டால் இயற்கைப் பேரிடரை தவிர்க்க முடியாது எனவும் பிரதமர் கூறினார்.