இந்திய எரிசக்தி வளர்ச்சியில் கனடா பங்கேற்கும்: ஜஸ்டிங் ட்ரூடோ

இந்திய எரிசக்தி வளர்ச்சியில் கனடா பங்கேற்கும்: ஜஸ்டிங் ட்ரூடோ
இந்திய எரிசக்தி வளர்ச்சியில் கனடா பங்கேற்கும்: ஜஸ்டிங் ட்ரூடோ
Published on

வடகொரியா, மாலத்தீவு விவகாரத்தில் இந்தியாவும் கனடாவும் ஒரே நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக கனடாவின் பிரதமர் ஜஸ்டிங் ட்ரூடோ தெரிவித்துள்ளார். 

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகு, இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தபோது இதை ட்ரூடோ தெரிவித்துள்ளார். இந்தியாவின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்வதில் கனடாவின் பங்கும் இருக்கும் என்று கூறிய ட்ரூடோ, இந்தியாவும் கனடாவும் இயல்பாகவே நல்லுறவைப் பேணி வரும் நாடுகளாக இருப்பதாகவும் தெரிவித்தார். இரண்டு நாடுகளுக்கு இடையே உறவு நாளுக்கு நாள் வலுப்பெற்று வருவதாக கூறிய கனடா பிரதமர், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா விரைவான வளர்ச்சியைக் கண்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்தியாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள கனடா பிரதமர் ட்ரூடோவை இந்தியப் பிரதமர் மோடி நேரில் வரவேற்கவில்லை என்ற விமர்சனம் எழுந்த நிலையில், இருதலைவர்களும் டெல்லியில் சந்தித்து விரிவான ஆலோசனை நடத்தினர். இதற்கிடையே, இரு நாடுகள் இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

முன்னதாக குடியரசுத் தலைவர் மாளிகையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது. காரிலிருந்து இறங்கிய கனடா பிரதமரை நரேந்திர மோடி கட்டித் தழுவி வரவேற்றார். பின்னர் அவரது 3 குழந்தைகளுடனும் நரேந்திர மோடி கொஞ்சி மகிழ்ந்தார்.கனடா பிரதமரை முறைப்படி வரவேற்கவில்லை என சமூக வலைதளங்களில் பலர் குற்றச்சாட்டை எழுப்பி இருந்த நிலையில், இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com