இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தற்போது வெளிப்படையாக தெரிவதாக பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெறும் உலக வர்த்தக மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய மோடி, தாம் ஆட்சிப் பொறுப்பேற்றபோது விலைவாசி உயர்வு மக்களைத் திணறடித்துக் கொண்டும், அரசு முடங்கியும் கிடந்ததாகக் கூறினார். ஆனால், தற்போது வளர்ச்சி வெளிப்படையாகத் தெரிவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் அமைச்சகங்களுக்கு இடையே யார் அதிக அளவில் ஊழல் செய்வது எனப் போட்டி நிலவியதாகவும் மோடி குற்றம்சாட்டினார். சுதந்திரத்துக்குப் பின் பாஜக ஆட்சியில்தான் வளர்ச்சி விகிதம் 7.4 விழுக்காடாக அதிகரித்துள்ளதாகவும், பணவீக்க விகிதம் 4.5 விழுக்காடுக்குள் இருப்பதாகவும் மோடி கூறினார். ஜி.எஸ்.டி. போன்ற பொருளாதார சீர்திருத்தங்கள் காரணமாக நாட்டின் வளர்ச்சி அதிகரித்து வருவதாகவும் மோடி தெரிவித்தார்.