“வெற்று பக்கத்தை நிதியமைச்சர் நிரப்புவார் என எதிர்பார்க்கிறோம்” - ப. சிதம்பரம் ட்வீட் 

 “வெற்று பக்கத்தை நிதியமைச்சர் நிரப்புவார் என எதிர்பார்க்கிறோம்” - ப. சிதம்பரம் ட்வீட் 
 “வெற்று பக்கத்தை நிதியமைச்சர் நிரப்புவார் என எதிர்பார்க்கிறோம்” - ப. சிதம்பரம் ட்வீட் 
Published on
 
பிரதமர் நரேந்திர மோடியின் ரூ .20 லட்சம் கோடி திட்டங்கள் குறித்து  காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
 
கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாகப் பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் நேற்று உரையாற்றினார் அப்போது கொரோனா பாதிப்பு மனிதர்களுக்கு நிறையப் பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளதாகத் தெரிவித்தார். ஒரு வைரஸ் உலகத்தில் பெரும் நாசத்தை ஏற்படுத்தியுள்ளதாக வருந்தினார். கூடுதல் உறுதியுடன் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும் எனத் தெரிவித்துக்கொண்டார். 
 
 
அத்துடன் இந்தியாவின் வளர்ச்சியில் பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு முக்கிய பங்கு வகிப்பதாகத் தெரிவித்தார். இந்தியாவின் வளர்ச்சி ஐந்து முக்கிய அம்சங்களைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்த அவர், இந்திய மருந்துகள் உலகிற்கே தன்னம்பிக்கை கொடுத்து வருவதாகக் குறிப்பிட்டார். மேலும், இந்தியப் பொருளாதாரத்தை மீட்பதற்காக 20 லட்சம் கோடிக்குப் பொருளாதார திட்டங்களை அறிவித்தார். இந்தத் திட்டத்தின் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் ஊக்கம் பெரும் எனவும் தெரிவித்தார்.
 
 
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் ரூ .20 லட்சம் கோடி திட்டங்கள் குறித்து  காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் "நேற்று, பிரதமர் எங்களுக்கு ஒரு தலைப்பு செய்தியை வெளியிட்டார். வெறும் வெள்ளைத் தாளைக் கொடுத்தார். இயற்கையாகவே, எனது எதிர்வினையும் ஒரு வெற்று பக்கமாகவே இருந்தது! இன்று, மத்திய நிதியமைச்சர் வெற்றுப் பக்கத்தை நிரப்புவதை நாங்கள் எதிர்நோக்குகிறோம். அரசாங்கம் உண்மையில் பொருளாதாரத்தில் செலுத்தும் ஒவ்வொரு கூடுதல் ரூபாயையும் கவனமாக எண்ணுவோம் ”என்று தெரிவித்துள்ளார்.
 
 
மேலும் அவர், "யாருக்கு என்ன கிடைக்கிறது என்பதையும் நாங்கள் கவனமாக ஆராய்வோம்? ஏழை, பசி மற்றும் பேரழிவிற்குள்ளான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றபின் அவர்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை நாங்கள் முதலில் பார்ப்போம்" என்று  கூறினார்.
 
 
 
 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com