பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு மகாராஷ்டிரா மாநிலத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2020 - 21 கல்வியாண்டிற்கான CBSE பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை ரத்து செய்வதாக பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தார். இதையடுத்து குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் என சில மாநிலங்கள் தங்கள் மாநிலத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தது.
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை நடத்துவதா அல்லது ரத்து செய்வதா என்பது குறித்து தமிழக அரசு மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களின் பரிந்துரையின் அடிப்படையில் ஆலோசித்து வருகிறது.
இந்த சூழலில் தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு எல்லாம் வழங்கப்பட்ட நிலையில் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.