உண்மையான பக்தர்கள் பெண்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை: பினராயி விஜயன்

உண்மையான பக்தர்கள் பெண்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை: பினராயி விஜயன்
உண்மையான பக்தர்கள் பெண்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை: பினராயி விஜயன்
Published on

உண்மையான ஐயப்ப பக்தர்களின் உதவியுடன் எவ்வித எதிர்ப்பும் இன்றி இரண்டு பெண்களும் சாமி தரிசனம் செய்தனர் என்று கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

சபரிமலையில் புதன்கிழமை அதிகாலை இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்தனர். அதன் காரணமாக கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இது குறித்து  கேரளா முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அதில் " 2 பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்தபோது பக்தர்களிடம் இருந்து எந்த எதிர்பும் வரவில்லை. அந்த இரண்டு பெண்களும் மற்ற பக்தர்கள் பயணித்த வழியிலே பயணித்தனர். கேரளா அரசு தன் அரசியிலமைப்பு கடமையே செய்கிறது" என்றார் அவர்.

இதற்கிடையே  சபரிமலையில் 2 பெண்கள் சாமி  தரிசனம் செய்த வீடியோ வெளியானவுடன் கேரளாவில் பெரும் எதிர்ப்பு அலை எழத் தொடங்கியது. இதை தொடர்ந்து இன்று கேரளாவில் முழு அடைப்பும் நடந்து வருகிறது. இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக மற்றும் பல இந்து அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக கேரளா மாநிலம் முழுவதும் ஆங்காங்கே சாலை மாறியல்களும் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் அனைத்தும் இன்று எல்லை பகுதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.


 
ஏற்கெனவே உச்சநீதிமன்ற தீர்ப்பு  வெளிவந்த நாள் முதல் ஒவ்வொரு முறை சபரிமலை நடை திறக்கும் போதும் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த நிலையில் இரண்டு பெண்கள் நேற்று சாமி தரிசனம் செய்தது கேரளா முழுவதும் பெரிய போராட்ட களமாக மாறியுள்ளது. மேலும் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சபரிமலை செல்லும் பக்தர்களும் பெரும் அவதியுற்று வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com