கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு: பொதுநல மனு தாக்கல்

மருத்துவர் கொலை விவகாரம்: மத்திய புலனாய்வு பிரிவுக்கு மாற்ற கோரிக்கை
மேற்குவங்க மாநிலம்
மேற்குவங்க மாநிலம்முகநூல்
Published on

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் மருத்துவ மேற்படிப்பில் பயிற்சி பெற்று வந்த பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமைமுகநூல்

முன்னதாக ஆகஸ்ட் 8ம் தேதி இரவு பணியில் இருந்த அந்த பெண் மருத்துவர், மறுநாள் காலை மருத்துவமனையில் உள்ள ஆடிட்டோரியம் ஒன்றில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். முதற்கட்டமாக உடற்கூறாய்வில் உயிரிழந்த பெண் மருத்துவர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு பிறகு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேற்குவங்க மாநிலம்
கொல்கத்தா | பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெண் பயிற்சி மருத்துவர் கொலை! வெடித்தது போராட்டம்!

பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நாடு முழுவதும் இன்று மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்கு இன்றைய தினம் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி டி.எஸ் சிவஞானம் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கை மத்திய புலனாய்வு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் ஏற்கனவே விசாரணை நடைபெற்று வருவதாக கூறியும் பொதுநல மனுக்களை தள்ளுபடி செய்யவும் காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால் கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும், நாளை வழக்கின் விசாரணை நடைபெறும் எனவும் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com