சிறையில் புகைபிடிக்கும் நடிகர் தர்ஷன் போட்டோ! சிறப்பு சலுகையா? விசாரணையில் 7 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

ரேணுகாசாமி கொலை செய்யப்பட்ட வழக்கில், நடிகர் தர்ஷன், சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் ரவுடி ஒருவருடன் புகைபிடிக்கும் படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் தர்ஷன்
நடிகர் தர்ஷன்எக்ஸ் தளம்
Published on

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ரேணுகாசாமி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், நடிகர் தர்ஷன் பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்தியச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நடிகர் தர்ஷனும் அவருடன் சேர்ந்த சிறைவாசிகள் இருவரும் அமர்ந்திருக்கும் படம் வெளியாகி உள்ளது. மேலும், அப்புகைப்படத்தில் சிகரெட் பிடிப்பதும், காபி குடிப்பதும் பதிவாகி உள்ளது. இப்புகைப்படம் இணையத்தில் வெளியாகி வருவதால் பேசுபொருளாகி உள்ளது.

நடிகர் தர்ஷன்
நடிகர் தர்ஷன்எக்ஸ் தளம்

இது, எப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் என இதுவரை எந்த அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகவில்லை. அதேநேரத்தில் இப்படத்தை சிறைத் துறை நிர்வாகம் உறுதிப்படுத்தவும் இல்லை; மறுக்கவும் இல்லை. எனினும், ”புகைப்படம் உண்மையானதாக இருந்தால், சிறையில் உள்ள கைதிகளுக்கு அதிகாரிகளால் சட்ட விரோதமாக முன்னுரிமை அளிக்கப்படுவது குறித்து விசாரிக்கப்படும்” என காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி-சிறைகள்) மாலினி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்திருப்பதுடன், விசாரணைக்கும் உத்தரவிட்டிருந்தார்.

இதையும் படிக்க: IPL 2025| மும்பை அணியிலிருந்து வெளியேறும் ரோகித்? ரூ.20 கோடிக்கு வாங்க தயாராகும் அணிகள்!

நடிகர் தர்ஷன்
செருப்பால் அடித்த பவித்ரா.. கொலையை மறைக்க ரூ.40 லட்சம் கடன் வாங்கிய தர்ஷன்.. விசாரணையில் புது தகவல்!

இந்த நிலையில், இதுதொடர்பாக 7 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், "போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், இதில் தொடர்புடைய 7 அதிகாரிகளை கண்டறிந்து, அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தற்போது இந்த விவகாரம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது கடுமையான பாதுகாப்பு குறைபாடு" என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இதுதொடர்பாக கொலை செய்யப்பட்ட ரேணுகாசாமியின் தந்தை காசிநாத் சிவண்ணகவுடர், “மாநில காவல் துறையை நாங்கள் நம்பினாலும், கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ரசிப்பது வருத்தமளிக்கிறது. இதுபோன்ற விஷயங்களில் மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) விசாரணை தேவை. தர்ஷன் சிறையில் இருக்கிறாரோ, இல்லையோ என்ற எண்ணம் வருகிறது. அவர் சிறைச்சாலையில் சாதாரண கைதிகளைப் போல நடத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

பெங்களூரு மத்திய சிறையில் கைதிகளுக்கு விஐபி சலுகை பற்றிய தகவல்கள் வெளிவருவது இது முதல்முறையல்ல. சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்த அப்போதைய அதிமுகவைச் சேர்ந்த சசிகலாவுக்கும் சிறையில் சிறப்புச் சலுகைகள் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:மோடி, யோகி ஆதித்யநாத்தை புகழ்ந்த முஸ்லிம் பெண்.. சாம்பாரை ஊற்றி ’தலாக்’ சொன்ன கணவர் மீது வழக்கு!

நடிகர் தர்ஷன்
கர்நாடகா கொலை வழக்கு| போலீஸிடம் ஆலோசனை கேட்ட நடிகர் தர்ஷன்.. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் புது தகவல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com