யார் அந்த ராஷி என்பதுதான் பலரின் கேள்வியாக உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு யாரோ ஒருவர் 2,000 ரூபாய் நோட்டில், 'சோனம் குப்தா பேவஃபா ஹை' (சோனம் குப்தா ஒரு துரோகி) என்று இந்தியில் எழுதினார். அந்த நோட்டின் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியது.
இந்நிலையில் தற்போது யாரோ ஒருவர் 20 ரூபாய் நோட்டில் ‘ராஷி பேவஃபா ஹை’ (ராஷி ஒரு துரோகி) என இந்தியில் எழுதி வைத்துள்ளார். அந்த நோட்டின் புகைப்படமும் இணையதளங்களில் வைரலாக பரவியுள்ளது. இந்த புகைப்படத்தை பகிர்ந்து யார் அந்த ராஷி என பலரும் சமூக வளைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் டேக் செய்வது போல, பணத்தில் பெயர் எழுதியுள்ளனர். பணத்தாளில் எழுதுவது குற்றம் என கூறப்படும் நிலையில், 20ரூபாய் தாள் வைரலாகி வருகிறது. இதன் உச்சகட்டமாக யார் இந்த ராஷி (‘Rashi Kaun Hai’)என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.