கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு மசோதா|எதிர்ப்பு தெரிவித்த PhonePe இணை நிறுவனர் திடீர் மன்னிப்பு!

தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா குறித்து PhonePe தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான சமீர் நிகாம் வெளியிட்ட பதிவு சர்ச்சையான நிலையில், தற்போது அதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
சமீர் நிகாம்
சமீர் நிகாம்எக்ஸ் தளம்
Published on

தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை காங்கிரஸ் அரசு இயற்றியுள்ளது. அதில், ’கர்நாடகாவில் உள்ள அனைத்துத் தனியார் நிறுவனங்களிலும் நிர்வாகப் பணிகளில் 50 சதவீதமும், நிர்வாகம் சாராத பணிகளில் 75 சதவீதமும் கன்னடர்களை பணியமர்த்த வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதாவின்படி, கர்நாடக மாநிலத்தில் பிறந்தவர், 15 ஆண்டுகள் மாநிலத்தில் வசிப்பவர்கள், கன்னடத்தை தெளிவாகப் பேசவும், படிக்கவும், எழுதவும் தெரிந்தவர்கள் இடஒதுக்கீடு பெற தகுதியானவர்கள். தகுதியான அல்லது பொருத்தமான உள்ளூர் நபர்கள் கிடைக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அரசுடன் இணைந்து உள்ளூர் நபர்களுக்கு 3 ஆண்டுகளுக்குள் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் இந்த மசோதா கூறுகிறது. இந்த மசோதா, நடப்பு கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இதற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

இதற்கு இன்போசிஸ், மணிபால், பயோகான் உள்ளிட்ட பல்வேறு ஐ.டி. நிறுவனங்கள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்தன. இந்த மசோதா பாரபட்சமானது என்றும், அரசியல் சாசனத்தை மீறிய செயல் என்றும் கண்டனங்கள் வலுத்தன. குறிப்பாக, நாஸ்காம் (nasscom) எனப்படும் தேசிய ஐடி நிறுவனங்களுக்கான சங்கம், ஏற்கெனவே எட்டப்பட்ட வளர்ச்சி தடம்புரளாமல் தடுக்க ஐடி நிறுவனங்களுடன் அரசு ஆலோசனை நடத்த வேண்டும் என வலியுறுத்தியது. மேலும், இந்த இட ஒதுக்கீடு மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக அமையும் என பிரபல தொழிலதிபர்கள் கிரண் மஜூம்தார், மோகன் தாஸ் பை ஆகியோரும் தெரிவித்திருந்தனர்.

இதையும் படிக்க: தொலைதூர காதல்| புது மனைவிக்காக தினமும் 320 கி.மீ. பயணிக்கும் சீன இளைஞர்

சமீர் நிகாம்
தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு மசோதா|கிளம்பிய எதிர்ப்பு.. பின்வாங்கிய சித்தராமையா!

இப்படி, இந்த மசோதாவுக்கு தொடர்ந்து எதிர்ப்பு எழுந்த நிலையில், அந்த மசோதாவை நிறுத்திவைப்பதாக முதல்வர் சித்தராமையா அறிவித்தார். அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த மசோதா குறித்து விவாதித்து முடிவெடுப்போம் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இம்மசோதாவுக்கு எதிராக PhonePe தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான சமீர் நிகாமும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், ’எனது நிறுவனங்கள் மூலம் இந்தியா முழுவதும் 25,000க்கும் மேற்பட்ட வேலைகள் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில், பெற்றோரின் வேலை காரணமாக பல மாநிலங்களில் வாழ்ந்த என்னைப் போன்றவர்களுக்கு இந்த மசோதா நியாயமற்றது’ எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: சானியா மிர்சாவை திருமணம் செய்யப் போகிறேனா? முதல்முறையாக மவுனம் கலைத்த முகம்மது ஷமி!

சமீர் நிகாம்
கர்நாடகா| தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு மசோதா|PhonePe இணை நிறுவனரும் எதிர்ப்பு!

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “எனக்கு 46 வயதாகிறது. 15+ வருடங்கள் ஒரு மாநிலத்தில் வாழ்ந்ததில்லை. என் தந்தை இந்திய கடற்படையில் பணிபுரிந்தார். நாடு முழுவதும் பணியமர்த்தப்பட்டார். நாடு முழுவதும் வேலைவாய்ப்புகளை உருவாக்கினாலும், கர்நாடகாவில் வளர்ந்த தனது குழந்தைகள், ’எங்கள் சொந்த ஊரில் வேலைக்குத் தகுதியற்றவர்களா’ ”என அதில் கேள்வி எழுப்பியிருந்ததுடன், ”அவமானம்” என்றும் பதிவிட்டிருந்தார்.

இது கர்நாடகா மக்களிடம் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், அவருக்கு எதிரான கண்டனப் பதிவுகளும் எழுந்தன. இந்த நிலையில், தன் கருத்துக்கு PhonePe தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான சமீர் நிகாம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. கர்நாடகாவையும் அம்மாநில மக்களையும் இழிவுபடுத்துவது எனது நோக்கமல்ல என்பதை முதலில் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனது கருத்துகள் யாருடைய மனதையும் புண்படுத்தியிருந்தால், அதற்காக நான் உண்மையிலேயே வருந்துகிறேன். மேலும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: ’என்ன சொல்றீங்க’|ரூ.1,600 கட்டணம்; வலியின்றி உயிர் துறக்க இயந்திரம்.. ஸ்விட்சர்லாந்து கண்டுபிடிப்பு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com