இந்தியாவிற்கு இறக்குமதியாகும் ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்க விலை ரூ.27.74 மட்டுமே ஆகும். இதையடுத்து சேர்க்கப்படும் வரி மற்றும் பிற கட்டணங்களால் தான் அது ரூ.70க்கும் மேல் விற்கப்படுகிறது.
இந்தியாவில் தற்போது நாள்தோறும் விலை மாற்றம் செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் பெட்ரோலின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. ஆனால் சர்வதேச சந்தைகளை பொறுத்த வரையில் பெட்ரோலின் விலை அதிகரிக்கவில்லை. இந்தியாவிற்கு வரும் ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்கவிலை ரூ.27.24 தான், பின்னர் வரிகள் மற்றும் கட்டணங்கள் சேர்த்து பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு அனுப்படுகிறது. இவ்வாறாக 30.48 ரூபாய்க்கு விற்பனை நிலையங்களுக்கு வரும் பெட்ரோலுடன் 21 ரூபாய்க்கு மேல் கலால் வரியும், 15 ரூபாய்க்கு மேல் மதிப்புக்கூட்டு வரியும், அத்துடன் டீலர் கமிஷன் ரூ.3.50 சேர்த்து ரூ.70க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று தான் ரூ.30க்கு இந்தியா வரும் டீசலும் வரிகள் மற்றும் கட்டணங்கள் சேர்க்கப்பட்டு ரூ.60க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.