புதுச்சேரியில் மீண்டும் ரூ.100 ஐ கடந்தது பெட்ரோல் விலை

புதுச்சேரியில் மீண்டும் ரூ.100 ஐ கடந்தது பெட்ரோல் விலை
புதுச்சேரியில் மீண்டும் ரூ.100 ஐ கடந்தது பெட்ரோல் விலை
Published on

புதுச்சேரி மாநிலத்தில் 4 மாதங்களுக்குப் பிறகு, பெட்ரோல் விலை லிட்டருக்கு நூறு ரூபாயைக் கடந்தது.

புதுச்சேரி மாநிலத்தில் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பெட்ரோலின் விலை, லிட்டருக்கு நூறு ரூபாயைக் கடந்து விற்கப்பட்டது. நவம்பர் மாதம் மத்திய அரசு பெட்ரோல் - டீசலுக்கான கலால் வரியை குறைத்ததை அடுத்து புதுச்சேரி அரசும் கலால் வரியை வெகுவாக குறைத்தது. இதன் காரணமாக புதுச்சேரியில் பெட்ரோல், டீசலின் விலை வெகுவாகக் குறைந்தது. ஒரு லிட்டர் பெட்ரோல் 94 ரூபாய் 92 காசுகளாகவும், டீசல் 83 ரூபாய் 57 காசுகளாகவும் இருந்தது.

இந்நிலையில், 4 மாதங்களுக்கு பிறகு, புதுச்சேரியில் மீண்டும் இன்று பெட்ரோலின் விலை நூறு ரூபாயைக் கடந்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 16 காசுகளுக்கும், டீசல் 89 ரூபாய் 60 காசுகளுக்கும் விற்கப்படுகிறது.



சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் இன்று உயர்ந்திருக்கிறது. 10 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 6 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது. இதனால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 107 ரூபாய் 45 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 97 ரூபாய் 52 காசுகளுக்கும் விற்கப்படுகிறது.

உக்ரைன் போர் மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் ஏமன் நாட்டின் எண்ணெய் கிணறுகள் சேதம் ஆகிய காரணங்களால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. எனினும், கடந்த சில நாட்களாக ரஷ்யா -உக்ரைன் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. இருப்பினும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com