எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணித் தலைவர்கள், தலைமைத் தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை வழங்கியுள்ளனர். தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு INDIA கூட்டணித் தலைவர்களான அபிஷேக் சிங்வி, டி.ஆர். பாலு, டி ராஜா, சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் நேரடியாக சென்று அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர். அந்த மனுவில், வாக்கு எண்ணிக்கை குறித்து பல்வேறு கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர்கள், தபால் வாக்குகளை முதலில் எண்ணி முடிக்க வேண்டும், அதன் பிறகே வாக்கு இயந்திரத்தில் எண்ணிக்கை தொடங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக கூறினர்.
முன்னதாக சனிக்கிழமை INDIA கூட்டணித் தலைவர்கள் வாக்கு எண்ணிக்கை, கருத்து கணிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் குறித்து ஆலோசனை நடத்தியிருந்தனர்.