வன்முறை குற்றச்சாட்டு: இஸ்லாமியர்களுடைய உடைமைகளை அழிப்பதற்கு எதிராக மனுதாக்கல்

வன்முறை குற்றச்சாட்டு: இஸ்லாமியர்களுடைய உடைமைகளை அழிப்பதற்கு எதிராக மனுதாக்கல்
வன்முறை குற்றச்சாட்டு: இஸ்லாமியர்களுடைய உடைமைகளை அழிப்பதற்கு எதிராக மனுதாக்கல்
Published on

வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி இஸ்லாமியர்களுடைய வீடுகள் மற்றும் கடைகள் உள்ளிட்டவற்றை இடிப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இஸ்லாமிய அமைப்பான ஜமாய் உலாமா இ ஹிந்த் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. அதில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ள கலவரங்களில் வன்முறையில் ஈடுபட்ட, சந்தேகத்தின் பெயரில் இஸ்லாமியர்களுடைய வீடுகள் மற்றும் கடைகள் ஆகியவை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளால் புல்டோசர்கள் கொண்டு இடிக்கப்படுவதாகவும், எந்தவிதமான குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இவ்வாறு மாநில அரசுகள் தன்னிச்சையாக செயல்படுவது சட்டவிரோதம் என்றும், எனவே உடனடியாக இந்த புல்டோசர் பயன்படுத்தும் ஆபத்தான அரசியலை கைவிட சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யக்கூடிய மாநிலங்களில் சிறுபான்மையினராக உள்ள இஸ்லாமியர்கள் மீது குறிவைத்து இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும், இத்தகைய நடவடிக்கைகளை குற்றச்செயலாக அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com