முழுமுடக்க நாளிலும் கொரோன தடுப்பூசி செலுத்த அனுமதி: 4000 மையங்களில் ஊழியர்கள் தயார்

முழுமுடக்க நாளிலும் கொரோன தடுப்பூசி செலுத்த அனுமதி: 4000 மையங்களில் ஊழியர்கள் தயார்
முழுமுடக்க நாளிலும் கொரோன தடுப்பூசி செலுத்த அனுமதி: 4000 மையங்களில் ஊழியர்கள் தயார்
Published on

முழு ஊரடங்கு நாளான இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள செல்லும் மக்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகிறது.

தமிழகம் முழுவதும் 4000 தடுப்பு மையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. சென்னையில் மட்டும் 200க்கும் மேற்பட்ட மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்த சுகாதாரப் பணியாளர்கள் தயாராக உள்ளனர்.

தமிழகத்திற்கு இதுவரை 57,03,590 கோவிஷீல்டு தடுப்பூசியும், 10,82,130 கோவாக்சின் தடுப்பூசியும் வழங்கப்பட்ட நிலையில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் நேற்று வரையிலான 90 நாட்களில் 52,51,820 டோஸ் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. முழு ஊரடங்கு நாளான இன்று மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு அனுமதி கொடுத்த நிலையிலும் தடுப்பூசி மையங்களுக்கு வரும் மக்களின் வருகை குறைவாக இருப்பதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 25.36 லட்சம் கொரொனா தடுப்பூசி போடப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை 14.09 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com