திருவிழாக்கள் மற்றும் ரமலான் நோன்பை கருத்தில் கொண்டு, புதுச்சேரியில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் இரவு 10 மணி வரை
வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக புதுச்சேரியில் அனைத்து வழிபாட்டுத்தலங்களும் இரவு 8 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டுமென ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அனைத்து சமய நிர்வாகிகளுடன் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, புதுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களின் திருவிழாக்கள், இஸ்லாமியர்கள் கடைப்பிடிக்கப்படும் ரமலான் நோன்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து, கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இரவு 10 மணி வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறந்து வழிபாடுகள் நடத்திட அனுமதியளித்து தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார்.