மசூதியை நோக்கி அம்புவிடும் சைகை சர்ச்சை... வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளரை புறக்கணித்த மக்கள்! #Video

ஹைதராப்பாத் தொகுதியில், இஸ்லாம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பாஜகவின் மாதவி லதா வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, பெண்மணி ஒருவர் அவரைப் புறக்கணித்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாதவி லதா
மாதவி லதாட்விட்டர்
Published on

17 மக்களவைத் தொகுதிகள் உள்ள தெலங்கானாவில், அடுத்த மாதம் 13ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதன் தலைநகராக அறியப்படும் ஹைதராபாத்தில், பரதநாட்டிய நடனக் கலைஞரான மாதவி லதா, பாஜகவின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார்.

இவர் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெற்ற ராமநவமி நிகழ்ச்சியில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் கலந்துகொண்டபோது, அங்கிருந்த மசூதியை நோக்கி வில் அம்புகளை ஏவுவதுபோல் செய்கை காட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. பாஜக வேட்பாளர் மாதவி லதாவின் இந்தச் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

மாதவி லதா
மசூதியை நோக்கி வில் அம்பு.. ஐதராபாத் பாஜக பெண் வேட்பாளரின் செய்கை.. எழும் கண்டனங்கள்!

இதுதொடர்பாக மாதவி லதா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கக்கோரி பலரும் வலியுறுத்தினர். இந்த வீடியோ வைரலான நிலையில், மாதவி லதா மன்னிப்பும் கோரியிருந்தார்.

இதுகுறித்து அவர், “எனது வீடியோ சமூக ஊடகங்களில் பரவுவது எனது கவனத்திற்கு வந்தது. இது முழுமையடையாத வீடியோ மற்றும் யாருடைய உணர்வுகளையும் நான் புண்படுத்தவில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதுபோன்ற வீடியோவினால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். ராம நவமியின்போது, நான் வானத்தை நோக்கி ஒரு (கற்பனை) அம்பு எய்வதுபோல சைகை செய்து கொண்டிருந்தேன். அந்த அம்பை ஒரு கட்டடத்தை நோக்கி எய்தேன், அப்போது மசூதி அங்கிருந்தது தெரியாது” எனத் தெரிவித்து இருந்தார்.

இதையும் படிக்க: “என் மனைவி உணவில் டாய்லெட் கிளீனர்” - குற்றஞ்சாட்டிய இம்ரான் கான்; பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்தரவு!

மாதவி லதா
மசூதியை நோக்கி அம்பு விடுவதுபோல் செய்கை.. சர்ச்சையில் சிக்கிய பாஜக வேட்பாளர்.. யார் இந்த மாதவி லதா?

இந்த நிலையில், இன்று ஹைதராப்பாத் தொகுதியில், இஸ்லாம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் மாதவி லதா வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, பெண்மணி ஒருவர் அவரைப் புறக்கணித்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்தப் பெண்மணியிடம் பாஜக குறித்து துண்டறிக்கை ஒன்றை நீட்டி எடுத்துரைக்கிறார் மாதவி லதா. அதைக் கேட்டுவிட்டு, கடைசியாக அந்தப் பெண்மணி அலட்சியமாக கை விரித்து புறக்கணிக்கிறார்.

அதேபோல், இன்னொரு வீடியோ ஒன்றிலும் மாதவி லதா, மிகவும் மனமிரங்கி பாஜகவுக்கு வாக்கு செலுத்தும்படி கேட்கிறார். ஆனால், அதிலுள்ள நபரோ மிகவும் அமைதியாக நிற்கிறார். அதாவது, அவரது தோரணையும் பாஜகவைப் புறக்கணிப்பது போன்றே உள்ளது. இந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதையும் படிக்க: நாகலாந்து|1 ஓட்டுகூட பதிவாகாத 6 மாவட்டங்கள்.. தனி மாநிலம் கேட்டு வீட்டுக்குள் முடங்கிய மக்கள்!

மாதவி லதா
மசூதியை நோக்கி வில் அம்பு.. ஐதராபாத் பாஜக பெண் வேட்பாளரின் செய்கை.. எழும் கண்டனங்கள்!

ஒவைசியின் கோட்டை ஹைதராபாத்!

1984-ஆம் ஆண்டுமுதல், கிட்டத்தட்ட 40 வருடங்களாக, ஹைதராபாத் தொகுதி, ஒவைசி குடும்பங்களின் கோட்டையாக உள்ளது. அங்கு, ஏஐஎம்ஐஎம் கட்சியே வெற்றிபெற்று வருகிறது. சுல்தான் சலாவுதீன் ஒவைசிக்குப் பிறகு, 2004 முதல் அவரது மகன் அசாதுதீன் ஒவைசி வெற்றிபெற்று வருகிறார்.

நான்கு முறை அத்தொகுதியின் அசைக்க முடியாத எம்பியாக வலம் வரும் அசாதுதீன் ஒவைசி, கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், பாஜகவின் பகவந்த் ராவை 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இந்த முறை அவருக்குப் போட்டியாக அந்தத் தொகுதியில் பாஜக சார்பில் மாதவி லதா நிறுத்தப்பட்டுள்ளார். அவர், நிறுத்தப்பட்டது முதலே இஸ்லாம் மக்களுக்கு எதிராகவே கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: பூச்சிக்கொல்லி மருந்து அதிகம்.. ஆய்வில் தகவல்.. எவரெஸ்ட் மீன் மசாலாவைத் தடை செய்த சிங்கப்பூர்!

மாதவி லதா
“இஸ்லாமியர்கள் மத்தியில் பாஜக பயத்தை உருவாக்கியிருக்கிறது” அசாதுதீன் ஓவைசி குற்றச்சாட்டு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com