மக்களிடம் இன்னும் எவ்வளவு ரூ.2,000 தாள்கள் புழக்கத்தில் இருக்கிறது? - வெளிவந்த அதிர்ச்சி தகவல்

அக்டோபர் 8ஆம் தேதி முதல் ரிசர்வ் வங்கியின் 19 மண்டல அலுவலகங்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
RBI
RBIPT
Published on

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெற காலக்கெடு முடிவடைந்த நிலையிலும், இன்னும் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் அந்த ரூபாய் தாள்கள் மக்களிடம் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

உயர்மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த மே மாதம் 19ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. கருப்பு பணத்தை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்த ரிசர்வ் வங்கி, அவற்றை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வங்கிகளில் மாற்றிக்கொள்ள அறிவுறுத்தியது.

அதன்பிறகு, அக்டோபர் 7ஆம் தேதி வரை காலக்கெடுவையும் நீட்டித்தது. வாய்ப்பை தவறவிட்டவர்கள் அக்டோபர் 8ஆம் தேதி முதல் ரிசர்வ் வங்கியின் 19 மண்டல அலுவலகங்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ், இன்னும் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மக்களிடம் இருப்பதாக தெரிவித்தார். இந்த ரூபாய் நோட்டுகளையும்ம் விரைவில் திரும்பப்பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

முன்னதாக, மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை 3 லட்சத்து 62 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. திரும்பப்பெறுவதாக அறிவிக்கப்பட்ட மே மாதம் 19ஆம் தேதி அது, 3 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்ததாகவும் தெரிவித்திருந்தது. ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி வரை 93 சதவிகிதம், அதாவது 3 லட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.

அதன்பிறகாக, 24 ஆயிரம் கோடிரூபாய் மதிப்பில் மக்களிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்த நிலையில், சிறிது சிறிதாக திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இன்னும் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மக்களிடம் இருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com