சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகொள் விடுத்துள்ளார்.
மகாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் அனைவரும் காலை 7 மணி முதல் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அத்துடன் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வாக்களித்து வருகின்றனர். இது மக்களவைத் தேர்தலுக்கு பின் நடைபெறும் முதல் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ஹரியானா, மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தல் மற்றும் சில மாநிலங்களில் இடைத்தேர்தல் இன்று நடைபெறுகின்றன. தேர்தல் நடக்கும் இடங்களில் மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களிக்க வேண்டும். அனைவரும் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் அதிகளவில் வந்து தங்களின் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.