“மாஸ்க் போடுங்கள்; நெரிசலை தவிருங்கள், இல்லையெனில் ஐ.சி.யு தான்” - பிரதீப் கவுர்

“மாஸ்க் போடுங்கள்; நெரிசலை தவிருங்கள், இல்லையெனில் ஐ.சி.யு தான்” - பிரதீப் கவுர்
“மாஸ்க் போடுங்கள்; நெரிசலை தவிருங்கள், இல்லையெனில் ஐ.சி.யு தான்” - பிரதீப் கவுர்
Published on

சென்னை மக்கள் கொரோனாவை மறந்து விட்டது போல தெரிவதாக இந்திய மருத்துவ ஆய்வு கழகத்தின் விஞ்ஞானியும், பொது சுகாதார நிபுணருமான பிரதீப் கவுர் கூறியுள்ளார். 

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், அதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதேபோல், தமிழகத்தை கொரோனா தாக்கம் குறைந்து கொண்டே வருகிறது. இதனிடையே, பிரிட்டனின் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பிரிட்டனில் இருந்து சென்னை வந்த நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி வழியாக சென்னை வந்த அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலை தொற்று உறுதியாகியுள்ளது. சிகிச்சைக்காக அவர் கிண்டியிலுள்ள கிங் மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை தாக்கியுள்ள கொரோனா மரபியல் மாற்றமடைந்த வைரஸால் ஏற்பட்டதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான், சென்னை மக்கள் கொரோனாவை மறந்து விட்டது போல தெரிவதாக இந்திய மருத்துவ ஆய்வு கழகத்தின் விஞ்ஞானியும், பொது சுகாதார நிபுணருமான பிரதீப் கவுர் கூறியுள்ளார். 

“சென்னை வாழ் மக்கள் பெருந்தொற்று நோயான கொரோனவை முற்றிலுமாக மறந்துவிட்டதாகவே தெரிகிறது. எங்கு பார்த்தாலும் மாஸ்க் அணியாமல் உள்ள மக்களை பார்க்க முடிகிறது. குறிப்பாக கூட்ட நெரிசல் அதிகமுள்ள மால்கள் மாதிரியான இடங்களில் மக்கள் மாஸ்க் என்ற ஒன்றை மறந்து விட்டனர். 2021 ஆம் ஆண்டை நல்ல ஆரோக்கியத்துடன் குடும்பத்தோடு தொடங்க கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றுங்கள். இல்லையெனில் ஐ.சி.யு தான்” என தெரிவித்துள்ளார் அவர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com