மூச்சு முட்டும் அளவுக்கு கூட்ட நெரிசல்: கர்நாடகாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

மூச்சு முட்டும் அளவுக்கு கூட்ட நெரிசல்: கர்நாடகாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
மூச்சு முட்டும் அளவுக்கு கூட்ட நெரிசல்: கர்நாடகாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
Published on

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 50 நாட்களை கடந்து ஊரடங்கு அமலில் உள்ளது. சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் பொதுமக்கள் கூடும் விழாக்களுக்கு தடை தொடர்கிறது. எந்தவித மதவழிபாடு தொடர்பாகவும் பொதுமக்கள் கூட அனுமதி இல்லை என்ற அறிவிப்பு தொடர்கிறது.

இந்நிலையில் கர்நாடகாவில் கிராம மக்கள் ஒன்று கூடி ஊர்விழா போன்ற ஒன்றை நடத்திய சம்பவம் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. கர்நாடகாவின் கொலகொண்டநாகள்ளி கிராம மக்கள் விழா ஒன்றை நடத்தியுள்ளனர். பொதுமக்கள் ஒன்றுகூடி கொண்டாடிய இந்த விழா தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

ஆனால் ஊரடங்கு அமலில் உள்ளதால் ஊர் விழாவுக்காக கிராம மேம்பாட்டு அலுவலரிடம் அனுமதி பெற்றுள்ளனர். இந்நிலையில் ஊரடங்கு நேரத்தில் மக்கள் கூட அனுமதி வழங்கிய கிராம மேம்பாட்டு அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் இது போன்ற கவனக்குறைவான செயலால் கொரோனாவின் தாக்கம் மேலும் அதிகமாகும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com