தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெறாதவர்கள் கைது செய்யப்படமாட்டார்கள் என்றும், அவர்கள் ஏற்கனவே அனுபவித்த வந்த சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
அசாம் மாநிலத்தில் வசிக்கும் மக்களின் குடியுரிமையை உறுதி செய்யும் தேசிய குடிமக்கள் பதிவேடு நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டது. அதில் மூன்று கோடியே 11 லட்சத்து 21 ஆயிரத்து நான்கு பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்த நிலையில், 19 லட்சத்து ஆறாயிரத்து 687 பேரின் பெயர்கள் இடம்பெறவில்லை.
இதுதொடர்பாக வெளிநாட்டு ஊடகங்களில் வெளியான தவறான செய்தியை சுட்டிக்காட்டியுள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம், பதிவேட்டில் இடம் பெறதாதவர்கள் கைது செய்யப்படமாட்டார்கள் என்றும், அவர்கள் ஏற்கனவே அனுபவித்த வந்த சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளது.
மாநிலத்தில் அமைக்கப்படும் 200 சிறப்பு குறைதீர் முகாம்களில், பெயர்விடுபட்டவர்கள் உரிய ஆவணங்களுடன் மனு அளித்து தங்களது பெயர்களை பதிவேட்டில் சேர்த்துக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.