நகைக்கடன் அறிவிப்பை வெளியிட்டு ரூ.1.28 கோடி கள்ளநோட்டுகளோடு சிக்கிய நபர்கள்!

நகைக்கடன் அறிவிப்பை வெளியிட்டு ரூ.1.28 கோடி கள்ளநோட்டுகளோடு சிக்கிய நபர்கள்!

நகைக்கடன் அறிவிப்பை வெளியிட்டு ரூ.1.28 கோடி கள்ளநோட்டுகளோடு சிக்கிய நபர்கள்!
Published on

பெங்களூர் அருகே சித்தாபுரா பகுதியில் ஒரு சதவீத வட்டியில் கடன் மற்றும் நகைக்கடன் வழங்கப்படும் என அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்ட நிலையில், சந்தேகமடைந்த மக்கள் அளித்த புகாரின் பேரில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடமுயன்ற விவகாரம் அம்பலமாகி உள்ளது.

பெங்களூர் அருகே ரூ. 1. 28 கோடிக்கு 2000, 500 கள்ள ரூபாய் நோட்டுகள் பிடிபட்டன. இது தொடா்பாக திருநெல்வேலியைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள சித்தாபுரா பகுதியில் திருநெல்வேலியைச் சோ்ந்த நல்லகனி (53) என்பவா் நிதி நிறுவனம் நடத்தி வந்தாா். அவரது அலுவலகத்தில் திருநெல்வேலியைச் சோ்ந்த சுப்பிரமணியன் (60) என்பவா் ஆடிட்டராக இருந்து வந்துள்ளார். இவா்கள் அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்களிடம் ஒரு சதவீத வட்டிக்கு கடன் தருவதாகவும், நகைக் கடன் தருவதாகவும் கூறியுள்ளனர். அவா்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பொதுமக்கள், சித்தாபுரம் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். புகாரின் பேரில் அவா்கள் இருவரையும் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தியபோது உண்மை வெளியாகி உள்ளது.

அதில் அவா்கள் இருவரும் கள்ள ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விடுவதற்காக அங்கு வந்தது தெரிய வந்தது. அவா்களிடம் நடத்திய விசாரணையில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த நல்லகனி என்பவா் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விடும் கும்பலின் தலைவராக இருந்து வந்ததும், இவரிடம் 2000, 500 கள்ள ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் இருப்பதும் தெரிய வந்தது. கள்ள நோட்டுக்களை கா்நாடக மாநிலத்தில் புழக்கத்தில் விட முடிவு செய்த அவா்கள், கா்நாடகத்தில் நிதி நிறுவனம் போல அலுவலகம் தொடங்கியது தெரிய வந்தது.

இந்நிலையில் திருநெல்வேலியில் இருந்து ஒசூா் வழியாக கா்நாடகத்திற்கு காரில் கள்ள ரூபாய் நோட்டுகளுடன் ஒருவா் வருவதாக சித்தாபுரா போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அந்த பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது ஒசூா் வழியாக சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் ரூ. 1 கோடியே 28 லட்சத்து 68 ஆயிரம் மதிப்புள்ள 2000, 500 கள்ள ரூபாய் நோட்டுகள் அடங்கிய பெட்டி இருப்பது தெரிய வந்தது. அந்த கள்ள ரூபாய் நோட்டுகளை காரில் எடுத்து சென்ற திருநெல்வேலி பகுதியைச் சோ்ந்த அஜய்சிங் என்பவரைக் கைது செய்தனா்.

பின்னர் கைது செய்யப்பட்ட மூவரிடமும் பெங்களூரு மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com