டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கு மக்கள் மாறிவருகின்றனர்: பிரதமர் மோடி பெருமிதம்

டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கு மக்கள் மாறிவருகின்றனர்: பிரதமர் மோடி பெருமிதம்
டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கு மக்கள் மாறிவருகின்றனர்: பிரதமர் மோடி பெருமிதம்
Published on

டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கு மக்கள் மாறிவருவதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி, மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி வழியாக நாட்டு மக்களுக்கு மான் கி பாத் நிகழ்ச்சி மூலம் உரையாற்றி வருகிறார். அந்தவகையில் 29ஆவது மான் கி பாத் நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, அம்பேத்கரை நினைவுகூறும் வகையில் பீம் செயலியில் பணபரிமாற்றம் செய்வது குறித்து ஒவ்வொருவரும் குறைந்தது 125 பேருக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைகோள்களை ஏவி சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகளையும் பிரதமர் மோடி தெரிவித்துக்கொண்டார். விவசாயிகளின் கடின உழைப்பால் உணவு தானிய உற்பத்தி 2,700 டன்னாக உயர்ந்துள்ளதாகவும் பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார். உலக பெண்கள் தினமாக மார்ச் 8ம் தேதி கொண்டாடப்படுவதை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, நமது பெண்குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அந்த தினத்தை அனுசரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்ற பார்வை மாற்றுத்திறனாளி இந்திய கிரிக்கெட் அணிக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com