மனிதர்களை காட்டிலும் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு உணர்வுகள் அதிகம் என்பதை நாம் அறிவோம். அதுவும் இறப்பை முதல்கொண்டு அடையாளம் விலங்குகளும் பறவைகளும் அடையாளம் கண்டுகொள்ளும். அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்று பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கச்சேரா பகுதியில் 4 ஆண்டுகளாக இரண்டு மயில்கள் ஒன்றாக சுற்றித்திரிந்துள்ளன. எப்போதும் ஒன்றை ஒன்று பிரியாத இந்த மயில்களில் ஒரு மயில் இறந்துள்ளது. இதையடுத்து இறந்த மயிலை புதைப்பதற்காக இரண்டு பேர் தூக்கிச் செல்கின்றனர்.
இதனைப் பார்த்த மற்றொரு மயில் தாங்கிக் கொள்ளமுடியாமல், தூக்கிச் செல்லும் மயில் பின்னாடியே செல்கின்றது. சேர்ந்து வாழந்த மயிலின் பிரிவால் மற்றொரு மயில் பின்தொடரும் இந்த சம்பவம் பார்ப்பவர்களின் மனதை கரைய வைத்துள்ளது. இந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் வெளியிட்டுள்ளார். ட்விட்டரில் வெளியான இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.