வருகிறது PAYTM கிரெடிட் கார்டு... சிறப்பம்சங்கள் தெரியுமா?

வருகிறது PAYTM கிரெடிட் கார்டு... சிறப்பம்சங்கள் தெரியுமா?
வருகிறது PAYTM கிரெடிட் கார்டு... சிறப்பம்சங்கள் தெரியுமா?
Published on

PAYTM நிறுவனம் தனது பயனர்களுக்கு கிரெடிட் கார்ட் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இளைஞர்கள் மற்றும் தொழில் முறை வல்லுனர்களுக்கு இந்த சலுகையை அறிவித்துள்ளது.

அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்குள் சுமார் இரண்டு மில்லியன் கிரெடிட் கார்டுகளை, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை கொடுக்கும் நிறுவனங்கள் மூலம் இதை வழங்க PAYTM நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

“நம் நாட்டில் கிரெடிட் கார்ட் சமூகத்தில் வசதி படைத்தவர்கள் பயன்படுத்தும் வகையிலேயே உள்ளது. எல்லோராலும் கிரெடிட் கார்ட் பயன்படுத்த முடியவில்லை. அதனை மனதில் கொண்டு எல்லோரும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் வகையில் யோசித்தோம். அதன்படி முதற்கட்டமாக இளைஞர்கள் மற்றும் தொழில் முறை வல்லுனர்களுக்கு கிரெடிட் கார்ட் வழங்க உள்ளோம். இதன் மூலம் அவர்களது நிதி சிக்கலை ஓரளவுக்கு சமாளிக்கலாம்” என PAYTM லெண்டிங் சி.இ.ஓ பவேஷ் குப்தா தெரிவித்துள்ளார். 

அப்ளிகேஷன் மூலமாக கிரெடிட் கார்டினை பயனர்கள் பெற்றுக் கொள்ளலாம். 

சிட்டி பேங்குடன் இணைந்து கிரெடிட் கார்ட் வழங்க PAYTM முடிவு செய்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com