ஆந்திரா: ஜனசேனா கட்சி சட்டமன்றக்குழு தலைவராக பவன் கல்யாண் தேர்வு!

ஆந்திராவில் ஜனசேனா கட்சி சட்டமன்றக்குழு தலைவராக பவன் கல்யாண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பவன் கல்யாண்
பவன் கல்யாண்pt web
Published on

ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலும், மக்களவைத் தேர்தலிலும் தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 164 தொகுதிகளில் இந்த கூட்டணி வென்றது. இதற்கு ஜனசேனா கட்சித் தலைவரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு பெரும் பங்கு உள்ளதாக கருதப்படுகிறது. அவருக்கு ஆந்திராவின் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பவன் கல்யாண்
பவன் கல்யாண்google

இச்சூழலில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஜனசேனா சட்டமன்ற குழுத்தலைவராக, பவன் கல்யாண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில் பவன் கல்யாண் பெயரை மூத்த தலைவர் என். மனோகர் முன்மொழிய, எம்.எல்.ஏக்கள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர். ஆந்திரா சட்டமன்றத்தில் 21 தொகுதிகளை வென்று , மாநிலத்தின் 2ஆவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது ஜனசேனா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com