நாடாளுமன்றம் மற்றும் ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை, நடிகரும் ஜனசேனா கட்சியில் தலைவருமான பவன் கல்யாண் இன்று வெளியிட்டார்.
நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி மே 12 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. அன்று 18 சட்டப் பேரவை இடைத்தேர்தலுக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறுகிறது. ஏப்ரல் 11 ஆம் தேதி அங்கு தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில், நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும் பிரபல தெலுங்கு ஹீரோவுமான பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் போட்டியிடுகிறது. இந்தக் கட்சியின் கூட்டம் நேற்று ஐதராபாத்தில் நடந்தது. இதில் பவன் கல்யாண் மற்றும் பொதுச் செயலாளர் தோடா சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்குப் பின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பவன் கல்யாண் இன்று அறிவித்துள்ளார். அதில் நான்கு நாடாளு மன்ற வேட்பாளர்களும் சட்டப்பேரவை தேர்தலுக்கான 32 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.