'ஃபேஸ் ரெகக்னிஷன்' என்று அழைக்கப்படும் முகத்தை அடையாளம் காணும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் விமான பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும்.
விமான நிலையங்களில் பயணிகளுக்கு முக அடையாளங்களின் அடிப்படையில் பயணிக்க அனுமதி அளிக்கும் நடைமுறையை படிப்படியாக செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முறையில் "போர்டிங் கார்டு" என்று அழைக்கப்படும் பயண அனுமதி சீட்டு இல்லாமலே பயணிக்க முடியும். தடையற்ற மற்றும் தொந்தரவு இல்லாத அனுபவத்தை பயணிகளுக்கு வழங்குவதற்காக அரசின் "டிஜி யாத்ரா" முயற்சியின் ஒரு பகுதியாக முக அங்கீகார அமைப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது.
முதல் கட்டமாக கொல்கத்தா, வாரணாசி, புனே, விஜயவாடா, பெங்களூர், தில்லி மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களில் மார்ச் 2023-க்குள் இந்த நடைமுறையை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது. "பேஸ் ரெகக்னிஷன்" என்று அழைக்கப்படும் முகத்தை அடையாளம் காணும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் இந்தியா நடைமுறையில் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும்.
இந்த விமான நிலையங்களில் 'பயண தின' பதிவுடன் கூடிய டிஜி யாத்ரா பயோமெட்ரிக் போர்டிங் முறையின் முதற்கட்ட சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது என மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் ஜெனரல் வி கே சிங் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பின் தேவை, மாறும் தன்மை கொண்டது என்பதால், விமானப் பாதுகாப்புக்கான ஒழுங்குமுறை ஆணையமான சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி (பி.சி.ஏ.எஸ்) அலுவலகம், தொடர்புடைய இதர முகமைகள் மற்றும் பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து, விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அவ்வப்போது மதிப்பாய்வு செய்து, தேவைக்கேற்ப மேம்படுத்துகிறது என அவர் பதிவிட்டுள்ளார்.
-கணபதி சுப்ரமணியம்
இதையும் படிக்க: ஆட்டோ எப்சி கட்டணத்தை 7 மடங்கு உயர்த்துவதா? தொழிற்சங்கத்தினர் போராட்டம்