கேரளாவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் பேருந்து ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக, பேருந்து பயணக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தினமும் வேலைக்குச் செல்பவர்களும், பள்ளி, கல்லூரி செல்பவர்களும் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
பல்வேறு இடங்களில் பயணிகளின் வசதிக்காக கூடுதலாக அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்து பயணக் கட்டணத்தை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதற்குள் தேவையின்றி இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், போக்குவரத்துத் துறை அமைச்சர் ANTONY RAJU விமர்சித்துள்ளார்.