ஜம்மு காஷ்மீர், டெல்லி, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுங்குளிர் வாட்டி வதைத்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
இமாச்சலப் பிரதேசத்தில் வெப்ப நிலை பூஜ்யத்தை விட குறைவாக சென்றதால், பல இடங்களில் பனிப்பொழிவு அதிகரித்தது. இதேபோல் தலைநகர் டெல்லியிலும் கடுங்குளிர் காரணமாக பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால், சாலையில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் பனிப்பொழிவு அதிகம் காணப்பட்டதால், சாலைகளில் பல அடி உயரத்திற்கு பனிகுவிந்திருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். பஞ்சாப் மற்றும் ஹரியானாவிலும் கடுங்குளிர் வாட்டி வதைத்ததால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.